சில தினங்களுக்கு முன் பேருந்தில் பயணம் - வேலூரிலிருந்து சென்னைக்கு. சாலை சிறப்பாக இருப்பதால் நல்ல வேகம் போகிறார் ஓட்டுனர். விரைவாக சென்று விடலாம் என்ற எண்ணம் முழுமை அடைவதற்குள் ஒரு பயம் பற்றவைத்தார் ஓட்டுனர் - செல்பேசியில் பேச ஆரம்பித்துவிட்டார். இப்படித்தான் ஆம்பூரில் சில மாதங்களுக்கு முன்பு அரை வேக்காட்டு ஓட்டுனரின் அஜாக்ரதையால் அவர் செல்பேசியில் பேசும்போது எதிரே (மற்றொரு அரை வேக்காடு டிரைவரால்) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிமீது மோதி கோரமான விபத்தில் பல உயிர்ப்பலி நடந்தேறியது.
இதற்கு இரண்டு தெரிவுகள் எனக்கு உதிக்கிறது, ஒன்று ஹிட்லர் சட்டம் - ஓட்டுனர் செல்பேசி உபயோகிக்க கூடாது, இரண்டாவது - அவர் கைகளுக்கு தொந்தரவின்றி ஹாண்ட்ஸ்-ஃப்ரீ கொடுப்பது.
Friday, 15 February 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment