Monday 18 February 2008

ஆத்திச்சூடி - ஸாஸ்வத் மூன்று வயதில்

Friday 15 February 2008

ஓட்டுனரின் அஜாக்ரதை

சில தினங்களுக்கு முன் பேருந்தில் பயணம் - வேலூரிலிருந்து சென்னைக்கு. சாலை சிறப்பாக இருப்பதால் நல்ல வேகம் போகிறார் ஓட்டுனர். விரைவாக சென்று விடலாம் என்ற எண்ணம் முழுமை அடைவதற்குள் ஒரு பயம் பற்றவைத்தார் ஓட்டுனர் - செல்பேசியில் பேச ஆரம்பித்துவிட்டார். இப்படித்தான் ஆம்பூரில் சில மாதங்களுக்கு முன்பு அரை வேக்காட்டு ஓட்டுனரின் அஜாக்ரதையால் அவர் செல்பேசியில் பேசும்போது எதிரே (மற்றொரு அரை வேக்காடு டிரைவரால்) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிமீது மோதி கோரமான விபத்தில் பல உயிர்ப்பலி நடந்தேறியது.

இதற்கு இரண்டு தெரிவுகள் எனக்கு உதிக்கிறது, ஒன்று ஹிட்லர் சட்டம் - ஓட்டுனர் செல்பேசி உபயோகிக்க கூடாது, இரண்டாவது - அவர் கைகளுக்கு தொந்தரவின்றி ஹாண்ட்ஸ்-ஃப்ரீ கொடுப்பது.

ஆத்திச்சூடி

ஆத்திச்சூடி
அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலகேல்
உடையது விளம்பேள்
ஊக்கமது கைவிடேள்
ஐயமிட்டு உண்
எண்ணெழுத்து
ஏற்பது இகழ்ச்சி
ஒப்புர ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்

திருக்குறள் - சாரம்

இலக்கணம் துறந்த திருக்குறள் - புலவர்கள் மன்னிக்க,
இந்த முயற்சி தமில்;-) பயிலுவோருக்கும் செய்யுளைக்கண்டு அஞ்சுபவருக்கும்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

தாய் தந்தை குரு வணக்கம்

நீங்கள் ஆத்திகரானாரலும் நாத்திகரானாரலும் இந்த தாய் தந்தை குரு வணக்கம் சொல்வது சிறப்பே!!!


உடல் தந்தாய் உயிர் தந்தாய் நல்லன்பு தந்தாயே!
உன் குருதி பாலாக்கி நல்லமுது தந்தாயே !!
கடமையெனத் தாழ்பணிந்தேன் காப்பாய் என் தாயே!!!
கண்கண்ட தெய்வம்நீ நல்லாசி அருள்வாயே.

கடலொத்த பேரன்பும் கல்வியும் நல்லொழுக்கமும்
காட்டிய நற்தந்தையே நின்காலடியில் வணங்குகிறேன்.

சுடராகி அறிவாகி மனம்தெளிய ஒளிதந்த
சற்குருவின் திருவடிகள் சரணடைந்தேன்.